
நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை வந்த பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானம் மீண்டும் லண்டனிலேயே தரையிறக்கப்பட்டது.
லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் சென்னைக்கு புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
உடனே இதுகுறித்து விமானி லண்டன் விமான நிலையத்திற்கு தகவல் அளித்தார். பின்னர் அந்த விமானம் மீண்டும் லண்டனிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறங்கினர் என்று பிரிட்டிஷ் எயார்வேஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும், விமானம் புறப்படும் நேரம், லண்டனுக்குத் திரும்புவதற்கு முன்பு விமானம் எவ்வளவு நேரம் வானில் இருந்தது போன்ற பிற விவரங்களை விமான நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை.
இதன் காரணமாக லண்டன் - சென்னை, சென்னை - லண்டன் செல்லவிருந்த 2 பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
0 Comments