
உள்நாட்டு சீனி உற்பத்திக்கு 18 வீத வெட் வரியும், இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு 50 வீத வெட் வரியும் விதிப்பதற்கான காரணத்தை விளக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி அரசாங்கம் செயல்படுவதாக அரசாங்கம் முன்னர் கூறியதாக தெரிவித்த கருத்தினை எதிர்க்கட்சித் தலைவர் சபையில் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடிய பின்னர் உள்ளூர் சர்க்கரைக்கு விதிக்கப்பட்ட 18 வீத வெட் வரியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
0 Comments