
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியிலும் 7 விக்கெட்டுகளால் டக்வர்த் லுவிஸ் முறையில் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி தொடரை 3–0 என முழுமையாக கைப்பற்றியது.
லண்டன், கெனிங்டன் ஓவல்மைதானத்தில் நேற்றுமுன்தினம் (03) நடந்த இந்தப் போட்டியில் வாகன நெரிசல் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணி தாமதித்தே மைதானத்திற்கு வந்தோடு மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 40 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணி 40 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 251 ஓட்டங்களை குவித்தது. ஷெர்பர்னே ரதர்போர்ட் 71 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பெற்றதோடு குடகேஷ் மோட்டி 54 பந்துகளில் 63 ஓட்டங்களை விளாசினார்.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த இங்கிலாந்து அணி ஆரம்பம் தொட்டு அதிரடியாக ஆடி 29.4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து மழை காரணமாக மாற்றப்பட்ட வெற்றி இலக்கான 246 ஓட்டங்களையும் எட்டியது. ஆரம்ப வீரர்களான ஜெம்மி ஸ்மித் 28 பந்துகளில் 64 ஓட்டங்களை விளாசியதோடு பென் டக்கட் 46 பந்துகளில் 58 ஓட்டங்களை குவித்தார்.
இங்கிலாந்து அணி 2023 செப்டெம்பருக்கு பின்னர் ஒருநாள் போட்டியில் பெறும் முதல் தொடர் வெற்றி இதுவென்பதோடு, 2022 இல் நெதர்லாந்துக்கு எதிராக 3–0 என தொடரை வென்ற பின்னர் ஒரு நாள் தொடர் ஒன்றை முழுமையாக வெல்வது இது முதல்
0 Comments