Trending

6/recent/ticker-posts

Live Radio

வாய் தர்க்கத்தினால் நண்பனின் தாக்குதலுக்கு இலக்கானவர் உயிரிழப்பு - யாழலில் சம்பவம்…!



நண்பனின் தாக்குதலுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வவுனிக்குளத்தை சேர்ந்த கதிரவேல்பிள்ளை கண்ணதாசன் (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி நண்பர்களுடன் விருந்தொன்றில் கலந்து கொண்டிருந்த வேளை, ஏற்பட்ட வாய் தர்க்கத்தினால், நண்பர் ஒருவர் மண் வெட்டி பிடியால் குறித்த நபரை தாக்கியுள்ளார்.

அதில் படுகாயமடைந்த நபரை, ஏனைய நண்பர்கள் அங்கிருந்து மீட்டு, மல்லாவி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றையதினம் வெள்ளிக்கிழமை சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதேவேளை தாக்குதலை மேற்கொண்ட நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments