Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்...!



இலங்கையின் பொதுக்கல்வியில் டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு உள்ளாக்குவதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 20மில்லியன் அமெரிக்க டொலர் நிதியத்தை வழங்குவதற்கு சீனக்குடியரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அவர்கள் இவ்வருடம் ஜனவரி மாதம் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டபோது இத்திட்டத்தை துரிதப்படுத்தி நடைமுறைப்படுத்துவதற்காக இருதரப்பிற்குமிடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதற்கமைவாக குறித்த கருத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட 500 பாடசாலைகள் மற்றும் மாதிரி ஸ்மார்ட் வகுப்பறைகளுக்குத் தேவையான உபகரணங்களை உத்தேசக் கருத்திட்டத்தின் மூலம் வழங்குவதற்கும் குறித்த கருத்திட்டத்தின் கீழான வலையமைப்பு வேலைத்திட்ட நடவடிக்கை முகாமைத்துவப் பிரிவு, வேலைத்திட்ட நடவடிக்கைக் கூடம் மற்றும் மாநாட்டு மண்டப இசுறுபாய வளாகத்தில் தாபிப்பதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments