Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



Cricket: மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று...!



பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர்களில் ஒருவரான ஏஞ்சலோ மேத்யூஸ் இனது டெஸ்ட் வாழ்க்கையின் இறுதிப் போட்டியாக இந்த போட்டி அமைந்துள்ளது.

இவரது பிரியாவிடைக்காக காலி மைதானம் தயாராக உள்ளது.

இந்தப் போட்டியை இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் இலவசமாக காண வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2025-2027 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த தொடரில் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இரு அணிகளும் இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன, இதில் இலங்கை 20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, பங்களாதேஷ் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது, மற்றும் 5 போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளன.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை அணி பங்கேற்கும் 49வது டெஸ்ட் போட்டி இதுவாகும். இதுவரை இந்த மைதானத்தில் நடந்த 48 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை 27-ல் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments