
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியேற்ற அமலாக்கத்திற்கு எதிரான மூன்றாவது நாள் போராட்டங்களை அடக்குவதற்கு கலிபோர்னியா தேசிய காவல்படை வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை (08) லாஸ் ஏஞ்சல்ஸின் தெருக்களில் நிறுத்தப்பட்டன.
இந்த நடவடிக்கையை மாநில ஜனநாயக ஆளுநர் கவின் நியூசம் சட்டவிரோதமானது என்று அழைத்தார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை பல பேரணிகளை “சட்டவிரோதக் கூட்டங்கள்” என்று அறிவித்தது.
சில எதிர்ப்பாளர்கள் பொலிஸார் மீது கற்கள், பெற்றோல் குண்டுகளங மற்றும் பிற பொருட்களை வீசியதாகவும் கூறப்படுகிறது.
மெக்சிகன் கொடிகள் மற்றும் அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளைக் கண்டிக்கும் பதாதைகளை ஏந்திய போராட்டக்காரர்கள் குழுக்கள் நகரைச் சுற்றியுள்ள இடங்களில் கூடி போராட்டங்களை முன்னெடுத்தனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்டத்தில் 2,000 தேசிய காவல்படை வீரர்களை அனுப்புவதற்கான உத்தரவை ட்ரம்ப் நிர்வாகம் திரும்பப் பெற வேண்டும் என்று கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் கேட்டுக் கொண்டார்.
இது சட்டவிரோதமானது என்றும் அவர் கூறினார்.
ட்ரம்ப் ஒரு நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாகவும், கலிபோர்னியாவின் மாநில இறையாண்மையை மீறுவதாகவும் நியூசம் குற்றம் சாட்டினார்.
0 Comments