Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



குஜராத்தில் இடிந்து விழுந்த பாலம்.. ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள்.. 4 பேர் பலி..!



குஜராத்தில் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் மஹிசாகர் நதியின் குறுக்கே வடோதரா - ஆனந்த் பகுதிகளை இணைக்கும் வகையில் பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 43 ஆண்டுகள் பழமையான இந்த பாலத்தை அப்பகுதி மக்கள் பிரதான பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோதே பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் , ஆட்டோ உள்ளிட்டவை ஆற்றுக்குள் விழுந்தன. மேலும், டேங்கர் லாரி ஒன்று இடிந்து விழுந்த பாலத்தின் மேலிருந்து விழும் நிலையில் தொங்கிக்கொண்டிருக்கிறது.




ஏராளமான வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்ததால் பலரை காணவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் குஜராத்தில் பாலம் உடைந்து ஆற்றுக்குள் வாகனங்கள் விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பாலம் இடிந்து விழுந்ததில் இரண்டு லாரிகள், 2 வேன்கள் மற்றும் ஆட்டோ , இருசக்கர வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்த போலீஸார் மீட்புப் பணியில் இறங்கியுள்ளனர். வதோதரா எஸ்.பி., கௌரவ் ஜசானி, “ஆனந்த் - வதோதரா பகுதிகளை இணைக்கும் பாலம் இடிந்து விழுந்தது. மூன்று, 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்துள்ளன. மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்

Post a Comment

0 Comments