Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி கண்டுபிடிப்பு...!



பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாலனி புளத்சிங்கள மாவத்தை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (24) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் முச்சக்கரவண்டி ஒன்று பிலியந்தலை - போகுந்தர பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) கண்டுபிடிக்கப்பட்டதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த முச்சக்கரவண்டியிலிருந்து கருப்பு நிற முகமூடிகள் இரண்டு மற்றும் கருப்பு நிற ஜாக்கெட் ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாலனி புளத்சிங்கள மாவத்தைக்கு முச்சக்கரவண்டியில் சென்ற இருவர், இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் முச்சக்கரவண்டி ஒன்று பிலியந்தலை - போகுந்தர பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த முச்சக்கரவண்டி ஏதேனுமொரு பிரதேசத்தில் இருந்து திருடப்பட்டது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments