Trending

6/recent/ticker-posts

Live Radio

பிற்பகல் வேளையில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை...!



வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருணாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (2) பிற்பகல் வேளையில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் குறித்த பகுதிகளின் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேல் மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் அபாயங்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அத்திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

Post a Comment

0 Comments