
மோட்டார் சைக்கிள் விபத்தில் நபரொருவர் மரணித்துள்ளார்.
சாவகச்சேரி – நுணாவில் ஏ – 9 வீதியில் சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த டிப்பரை, அதே திசையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் முந்திச் செல்ல முற்பட்டபோது எதிர்த் திசையாக யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கிப் பயணித்த இளைஞர் செலுத்திய மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
20 வயதுடைய குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



0 Comments