
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் பல பிரதேசங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை நேற்று (25) இரவு 10.00 மணி முதல் இன்று (26) இரவு 10.00 மணி வரை அமுலில் இருக்கும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, காலி மாவட்டத்தில் நாகொட, எல்பிட்டிய, பத்தேகம மற்றும் யக்கலமுல்ல, களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர மற்றும் மதுகம, மாத்தறை மாவட்டத்தில் கொட்டபொல, மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் எலபாத்த, கலவான மற்றும் பெல்மடுல்ல ஆகிய இடங்களுக்கு முதலாம் நிலை நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட்ட மற்றும் மாத்தறை மாவட்டத்தில் வெலிபிட்டிய ஆகிய இடங்களுக்கு 2 ஆம் நிலை நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



0 Comments