Trending

6/recent/ticker-posts

வெல்லவாய-தனமல்வில பகுதியில் விபத்து இருவர் காயம்..!



வெல்லவாய-தனமல்வில பிரதான வீதியில், வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யலபோவ SLTB டிப்போவிற்கு எதிரே உள்ள பகுதியில், இன்று (08) காலை ஒரு லொறியும், காரும் மோதி விபத்துக்குள்ளானதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

விபத்தில் காரில் இருந்த இருவர் காயமடைந்து வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து காரணமாக லொறி வீதியில் கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, அப்பகுதியில் ஒரு பாதையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது, மேலும் வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments