
தடை செய்யப்பட்டுள்ள யானை வெடி மற்றும் சீன செடி போன்றவற்றின் உற்பத்தி, விநியோகம், களஞ்சியப்படுத்தல், விற்பனை ஆகியவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த வெடிபொருட்கள் விலங்குகள் குறிப்பாக யானைகளுக்கு காயங்களை ஏற்படுத்தி அவற்றின் இறப்புக்கும் வழிவகுக்கின்றன.
மேலும் இது மனிதர்களுக்கும் தீங்கு விளைவிக்கின்றன.
இந்நிலையில் இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு குறித்த அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.



0 Comments