Trending

6/recent/ticker-posts

Live Radio

Accident Update: மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கோர விபத்து குறித்து...!



மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுதாவளையில் விபத்து, பாதசாரிக் கடவையில் பயணித்த பாடசாலை மணவியும் தாயும் படுகாயம்.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுதாவளை இராகிருஷ்ன வித்தியாலயத்திற்கு முன்னால் புதன்கிழமை (15.10.2025) இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உட்பட இருவர் படுகாமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

குறித்த பாடசாலையிலிருந்து பாடசாலை நிறைவடைந்ததும் தனது மகளை அழைத்துக் கொண்டு எதிரே அமைந்துள்ள பாதசாரிக் கடவையினால் வீதியைக் குறுக்கீடு செய்தவேளை தீடீரென வந்த முச்சக்கரவண்டி தாய் மற்றும் பிள்ளையின் மீது மோதிவிட்டு அருகிலிருந்த மரக்கறிக் கடையின் மீதும் மோதியுள்ளது.

இவ்விபத்துச் சம்பவத்தில் குறித்த தாயும் பிள்ளையும் படுகாயங்களுக்குட்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாடு, விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர் என பிரதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments