Trending

6/recent/ticker-posts

Live Radio

‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய திட்டம் இன்று ஆரம்பம்...!



போதைப்பொருள் கலாசாரத்தை தோற்கடிக்கும் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளகரங்கில் இடம்பெறவுள்ளது.

போதை பயன்பாட்டினால் இளைஞர் சமுதாயம் உட்பட பாடசாலை மாணவர்களின் வாழ்க்கையும் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனால் சமூக பொருளாதார பேரழிவையும் போதைப்பொரள் ஏற்படுத்தி வருகிறது. நாட்டிலிருந்து போதைப்பொருளை ஒழிப்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

இதற்கமைய தேசிய மட்டத்தில் இதனை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments