Trending

6/recent/ticker-posts

Live Radio

பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு, போலித் தங்க ஒப்பந்தத்தில் 2 மில்லியன் டாலர் மோசடி செய்யப்பட்டது தொடர்பில்...!



கானா நாட்டு ஊடக அறிக்கைகளின்படி, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது ஹிஸ்புல்லாவுக்கு போலித் தங்க ஒப்பந்தத்தில் $2 மில்லியன் டாலர் மோசடி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடிக்கு ஏற்பாடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 11 சந்தேக நபர்களுக்கு அக்ரா வட்டார நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

தங்கத்தை வழங்குவதாக உறுதியளித்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதை வழங்கத் தவறிவிட்டனர் என்று அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீண்டும் நவம்பர் 20 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

Post a Comment

0 Comments