
காஸாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் மீண்டும் தொடங்கப்படுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாகக் கூறி, காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், போர் நிறுத்தம் மீண்டும் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாகக் கூறி, காஸாவில் ஹமாஸ் அமைப்பினரால் மஞ்சள் கோடு என்று அழைக்கப்படும் பகுதியின் கிழக்கு மற்றும் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேலிய படைகள் தாக்குதலை நடத்தியது.
இந்தத் தாக்குதலில் சுமார் 104 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், காஸாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளது.



0 Comments