Trending

6/recent/ticker-posts

Live Radio

சீனப் பொருட்கள் மீதான வரியை குறைத்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்...!



அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனப் பொருட்கள் மீதான வரியை 10 சதவீதம் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் முன்னர் 57 சதவீதமாக இருந்த வரி தற்போது 47 சதவீதமாகக் குறைந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து, பிற நாடுகளுக்கு எதிராக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். இதன் ஒரு பகுதியாக, சீனப் பொருட்களுக்கு எதிராக அவர் கூடுதல் வரி விதித்ததால், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் பெரும் வர்த்தகச் சலசலப்பு நீடித்து வந்தது.

இந்தச் சூழ்நிலையில், தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஆகியோருக்கு இடையே முக்கியமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில், பரஸ்பர வரி விதிப்புகள், அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் போன்ற முக்கிய வர்த்தகப் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சந்திப்பின் பின்னரே, சீனப் பொருட்கள் மீதான வரியை டிரம்ப் குறைத்துள்ளார்.

Post a Comment

0 Comments