Trending

6/recent/ticker-posts

Live Radio

அரசாங்கத் திறைசேரிக்கு 6 பில்லியன் ரூபாயை வழங்கியது இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்...!



இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ஈட்டிய இலாபத்திலிருந்து 6 பில்லியன் ரூபாயை அரசாங்க திறைசேரிக்கு வழங்கியுள்ளதாக அந்த கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட இலாபத்தை ஈட்டிய பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், கடந்த செப்டம்பர் மாதம் 5 பில்லியன் ரூபாயை திறைசேரிக்கு வழங்கியிருந்தது.

அதனைத் தொடர்ந்து இன்று (22), மேலும் ஒரு பில்லியன் ரூபாய் நிதியை கூட்டுத்தாபனம் திறைசேரிக்கு வழங்கியுள்ளது.

அதற்கமைய, இந்த ஆண்டில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் திறைசேரிக்கு வழங்கிய மொத்தத் தொகை 6 பில்லியன் ரூபாய் என அந்த கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments