Trending

6/recent/ticker-posts

Live Radio

மட்டக்களப்பு மார்க்கமூடான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்...!



மட்டக்களப்பு மார்க்கமூடன ரயில் சேவைகள் நேற்று முதல் மீண்டும் தொடங்கும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அண்மைய அனர்த்தம் காரணமாக பொலன்னறுவைக்கும் மனம்பிட்டியவிற்கும் இடையிலான கல்லெல்ல பகுதியில் உள்ள ரயில் பாதையின் ஒரு பகுதி சேதமடைந்தது.

இதன் காரணமாக மட்டக்களப்புக்கு மார்க்கமூடான ரயில் சேவைகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில், வடக்கு ரயில் பாதையில் காங்கேசன்துறைக்கும் அனுராதபுரத்திற்கும் இடையிலான ரயில் சேவைகளும் இன்று மீண்டும் தொடங்குகின்றன.

அதன்படி, யாழ் ராணி’ எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இந்த சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

அனுராதபுரத்தில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு பயணத்தைத் தொடங்கும் இந்த ரயில், மாலை 6.53 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்தை அடையும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments