Trending

6/recent/ticker-posts

Live Radio

Update: கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஸொஹாரா புஹாரி முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இடைநீக்கம்...!



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ். ஸொஹாரா புஹாரி, கட்சியின் ஒழுக்கத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பரின் கையொப்பத்துடன் அவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் பாதீட்டு முன்மொழிவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கட்சித் தலைமை எடுத்த முடிவை மீறி, அதற்கு ஆதரவாக வாக்களித்தமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதீட்டை எதிர்ப்பது என்ற தீர்மானம் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமினால் குழுக்கூட்டத்தில் நேரடியாகத் தெரிவிக்கப்பட்டிருந்தும், அதற்கு முரணாக ஸொஹாரா புஹாரி செயற்பட்டுள்ளதாகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவரின் நேரடி அறிவுறுத்தல்களை மீறி செயற்பட்டமையானது கட்சியின் ஒழுக்கத்தை மிகக் கடுமையாக மீறும் செயலாகக் கருதப்படுக்கிறது.

எனவே,இது குறித்து ஒரு வார காலத்திற்குள் சத்தியக்கடதாசி மூலம் விளக்கம் அளிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் விளக்கம் அளிக்கத் தவறினால், கட்சியின் உறுப்புரிமையை நிரந்தரமாக ரத்து செய்வது உள்ளிட்ட மேலதிக ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னறிவிப்பின்றி எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments