Trending

6/recent/ticker-posts

Live Radio

வெனிசுவெலாவுடன் தொடர்புடைய 2 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா பறிமுதல்...!



வெனிசுவெலாவுடன் தொடர்புடைய 2 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா நேற்று (7) பறிமுதல் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கரீபியன் கடல் பகுதி மற்றும் வட அட்லாண்டிக் கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த இந்த 2 கப்பல்களையும் அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது.

இவற்றில் ஒரு கப்பல் ரஷ்யாவுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவின் தேசியக் கொடி பொருத்தப்பட்ட அந்த கப்பல் ரஷ்யாவுக்கு சென்றுகொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

கச்சா எண்ணெய் கப்பல்களை தொடர்ந்து பறிமுதல் செய்யும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

வெனிசுவெலா, மெக்சிகோ உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.

இந்நிலையில், வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவளிப்பதாக கூறி வெனிசுவெலா மீது அமெரிக்கா சில நாட்களுக்கு முன் தாக்குதல் நடத்தியது.

அத்துடன் அந்நாட்டின் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி ஆகியோரை அமெரிக்கா கைது செய்தது.

இவ்வாறான சூழ்நிலையில் வெனிசுவெலாவில் செயற்பட்டு வரும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

மேலும், வெனிசுவெலாவில் இருந்து பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டுசெல்லும் கப்பல்களையும் அமெரிக்கா பறிமுதல் செய்து வருகிறது. இவ்வாறான நிலையிலேயே மேற்சொன்ன இரண்டு கச்சா எண்ணெய்க் கப்பல்களை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது.

Post a Comment

0 Comments