Trending

6/recent/ticker-posts

Live Radio

பெண்களுக்கு வங்கி கணக்குகள் இல்லை உலக வங்கியின் அதிரடி அறிக்கை...!




உலகளாவிய நிதிநிலை குறித்த உலக வங்கியின் சமீபத்திய ஆய்வின்படி, உலகம் முழுவதும் சுமார் 700 மில்லியன் பெண்கள் இன்னும் வங்கிச் சேவைகளைப் பெற முடியாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களுக்கு வங்கிக் கணக்குகள், டிஜிட்டல் கொடுப்பனவுகள் மற்றும் ஒன்லைன் பணச் சேவைகள் எட்டாக்கனியாகவே உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் பெண்களின் நிதி பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 இல் 66 வீதமாக இருந்த பெண்களின் கணக்கு வைத்திருக்கும் விகிதம், 2024 இல் 73 வீதமாக உயர்ந்துள்ளது.

2021 இல் 22 வீத பெண்கள் மட்டுமே வங்கிகளில் சேமித்து வந்த நிலையில், தற்போது அது 36 வீதமாக அதிகரித்துள்ளது.

டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் மற்றும் பெறும் பெண்களின் எண்ணிக்கை 50 வீதத்திலிருந்து 58 வீதமாக உயர்ந்துள்ளது.

இலங்கை தொடர்பான பாலினத் தரவு அறிக்கையின்படி, இலங்கையில் 15 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளில் 80.2 வீதம் பேர் முறையான வங்கி கணக்கு அல்லது ஒன்லைன் பணச் சேவைக் கணக்கைக் கொண்டுள்ளனர்

Post a Comment

0 Comments