Trending

6/recent/ticker-posts

Live Radio

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தற்போதைய நிலை...!







மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது பலவீனமடைந்து வருவதால், இலங்கையின் வானிலையில் அதன் தாக்கம் குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன்படி கொழும்பிலிருந்து புத்தளம், மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பகுதிகளில் கடற்றொழில் மற்றும் கடற்படை நடவடிக்கைகளுக்காக விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கைகள் தற்போது மீளப் பெறப்பட்டுள்ளன.


அத்துடன் தென்மேற்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கையும் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் காற்று கிழக்கு அல்லது வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments