Trending

6/recent/ticker-posts

Live Radio

கமேனிக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் ...!




ஈரானில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையைக் உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

போராட்டக்காரர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்தால் அமெரிக்கா தலையிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

"ஈரான் மிகப்பெரிய சிக்கலில் உள்ளது. சில வாரங்களுக்கு முன்பு வரை யாரும் நினைத்துப் பார்க்காத நகரங்களை மக்கள் கைப்பற்றி வருகின்றனர். இந்தச் சூழலை நாங்கள் மிகக் கவனமாகப் பார்த்து வருகிறோம்," என்று ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த காலத்தைப் போலவே போராட்டக்காரர்களை ஈரான் அரசு கொன்று குவிக்கத் தொடங்கினால், அமெரிக்கா பார்த்துக் கொண்டு இருக்காது என்று எச்சரித்தார்.

அமெரிக்காவின் தலையீடு என்பது நேரடியாகத் தரைப்படை வீரர்களை (Boots on the ground) அனுப்புவதாக இருக்காது என்றும், ஆனால் ஈரானுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் பிற வழிகள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.



ஈரானில் நடக்கும் இந்தப் போராட்டங்கள் பல ஆண்டுகால தவறான ஆட்சியின் வெளிப்பாடு என்று குறிப்பிட்ட ட்ரம்ப், ஈரான் மக்கள் தங்கள் அரசாங்கத்தால் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாகவும், இப்போது அதற்கு அரசு பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கூறினார்.

Post a Comment

0 Comments