Trending

6/recent/ticker-posts

Live Radio

குளுகுளுவென மாறிய அமீரகம்: வரும் நாட்களில் இன்னும் குளிராக இருக்கும் என வானியலாளர் தகவல்..!!



ஐக்கிய அரபு அமீரகம் குளிர்காலத்தின் உச்சக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், வரும் நாட்களில் வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க சரிவை எதிர்பார்க்கலாம் என்றும், இந்த பருவத்தின் மிகவும் குளிரான காலகட்டம் வரும் நாட்களாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

குறிப்பாக பாலைவனப் பகுதிகளில், அதிகாலை நேரங்கள் மேலும் குளிராக மாறும் என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில், ஜனவரி மாதத்தின் நடுப்பகுதி பாரம்பரியமாக இப்பகுதி முழுவதும் குளிர்காலத்தின் உச்சமாக கருதப்படுகிறது, இது குளிர்ந்த காற்று, தெளிவான வானம் மற்றும் வழக்கமான குளிர்காலச் சூழலைக் கொண்டுவருகிறது.

இது தொடர்பாக இந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், எமிரேட்ஸ் வானியல் சங்கத்தின் தலைவர் மற்றும் அரபு வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் ஒன்றியத்தின் உறுப்பினர் இப்ராஹிம் அல் ஜர்வான், பொதுவாக ஜனவரி 10 மற்றும் ஜனவரி 22 ஆகிய தேதிகளுக்கு இடையில் வெப்பநிலை அதன் மிகக் குறைந்த நிலைக்குக் குறையும் என்று தெரிவித்துள்ளார். இந்த காலகட்டம் வளைகுடா பகுதி கதைகளில் “Der Al Sittin” அல்லது “the sixty days” என்று அழைக்கப்படுகிறது. இந்த பாரம்பரிய காலகட்டம் கடுமையான குளிருடன் தொடர்புடையது மற்றும் உள்ளூர் பழமொழிகளில் பெரும்பாலும் “knife’s edge” என்று விவரிக்கப்படுகிறது.
அதிகாலை நேரங்கள் கூடுதல் குளிராக இருக்கும்

இந்த காலகட்டத்தில், அதிகாலை நேர வெப்பநிலை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக பாலைவனப் பகுதிகளில், அங்கு வெப்பநிலை 5°C-க்குக் கீழே குறையக்கூடும் என்று செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த குளிர் காலம், ‘Thuraya’ எனப்படும் விண்மீன் கூட்டத்தின் மாலை நேரத் தோற்றத்துடன் ஒத்துப்போகிறது என்று அல் ஜர்வான் கூறியுள்ளார். இந்த வானியல் நிகழ்வு அரபு பாரம்பரியத்தில் நீண்ட காலமாக கடுமையான குளிர்கால நிலைமைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாத மழைப்பொழிவு குறித்த கண்ணோட்டம்

ஜனவரி மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் மழைப்பொழிவு பொதுவாக 12 முதல் 18 மில்லிமீட்டர் வரை இருக்கும் என்றும், சராசரியாக ஆறு முதல் எட்டு நாட்கள் மழை இருக்கும் என்றும் அல் ஜர்வான் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments