Trending

6/recent/ticker-posts

Live Radio

இலங்கை கடற்பரப்பில் அத்து மீறிய இந்திய மீனவர்கள் கைது...!




இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டுக்காக ஏழு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.


யாழ்ப்பாணம், காரைநகர் கோவிலான் கடற்பகுதியில் நேற்றிரவு (20) முன்னெடுக்கப்பட்ட இந்த கைது நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்காக இந்திய மீனவர்கள் பயன்படுத்தி படகையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான இலங்கையின் கடற்படையின் வழக்கமான ரோந்து நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள் இந்த கைதுப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுடன் கைதான மீனவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments