ஐசிசி ஆடவர்கள் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, மூன்றாவது முறையாக உலகக் கிண்ணத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
அஹ்மதாபாத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இந்த இறுதிப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 255 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.
இந்திய அணி சார்பில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சம்சன் 89 ஓட்டங்களைப் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.
256 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, இந்தியப் பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.
அந்த அணி 19 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியைத் தழுவியது.
நியூசிலாந்து அணி சார்பில் டிம் செய்ஃபர்ட் 52 ஓட்டங்களையும், மிட்செல் சான்ட்னர் 43 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தனது உலகக் கிண்ண மகுடத்தைத் தக்கவைத்துக் கொண்டதோடு, 2007 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை மீண்டும் தன்வசப்படுத்தியுள்ளது.
இதனிடையே, இந்த தொடரின் சிறப்பாட்டக்காரராக சஞ்சு சாம்சன் (315 ஓட்டங்கள்) தெரிவானதுடன், போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஜஸ்பிரிட் பும்ரா (15/4) தெரிவானார்.

0 Comments