Trending

6/recent/ticker-posts

Live Radio

வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவோருக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர விழிப்புணர்வு...!



வீட்டு வேலைக்காக பணியில் அமர்த்தப்படும் சிலரால் வீடுகளில் தங்க நகைகள், பணம் உள்ளிட்ட சொத்துகள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு.

கொழும்பு மற்றும் அதன் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளான மிரிஹானை, மகரகம, தெஹிவளை, கல்கிசை போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில் வீட்டுப் பணியாளர்களை பணியில் அமர்த்தும் நடைமுறை அதிகரித்து வருகிறது. மேலும் நாட்டின் பிற பகுதிகளிலும் இதுபோன்று வேலைக்கு நபர்களை அமர்த்துவது ஒரு பொதுவான நடைமுறையாக காணப்படுகிறது.

இவ்வாறு வீட்டு வேலைக்காக பணியாட்களை அமர்த்துவது பெரும்பாலும் முகவர் நிறுவனங்கள், தரகர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழியாகவும், சில சந்தர்ப்பங்களில் வீட்டு உரிமையாளர்கள் நேரடியாகவே பணியாட்களைத் தேடி அமர்த்துவதன் மூலமும் நடைபெறுகிறது.

ஆனால் சில சந்தர்ப்பங்களில் வீட்டு பணிக்காக வருகைத்தந்த நபர்கள் மோசடி முறையில் அதன் வீட்டு உரிமையாளர்களின் பணம், தங்க நகைகள், சொத்துகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் போன்ற பெறுமதியான பொருட்களை திருடிய சம்பவங்கள் குறித்து பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இம் முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கண்டறியப்பட்ட பொதுவான தகவல்களின் அடிப்படையில், இத்தகைய சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு வழிகாட்டுதல் வழங்குவது இலங்கை பொலிசாரின் பொறுப்பாகும்.

அதன்படி, வீட்டு பணிக்காக நபர்களை பணியில் அமர்த்தும் போது பின்வரும் வழிகாட்டுதல்கள் மற்றும் நடவடிக்கைகளின் ஊடாக அறிவுறுத்தப்படுகிறது.

சிலர் திட்டமிட்டு பணக்கார வீடுகளை இலக்காகக் கொண்டு வீட்டு பணிக்காக வருகைத்தந்து, பின்னர் தங்களது குடும்ப உறுப்பினர்களையும் இதில் இணைத்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவது அவதானிக்கப்படுகின்றது.

மோசடி செய்யும் நோக்கத்துடன் வருபவர்கள் குறுகிய காலத்திலேயே வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற முயற்சிப்பார்கள்.

ஒருவரை பணிக்கு அமர்த்தும் முன் அவர்களின் பின்னணி குறித்து முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

அவர்களின் தேசிய அடையாள அட்டையின் தெளிவான புகைப்படப் பிரதியை பெற்றுக்கொண்டு, அதன் மூலப் பிரதியை சரிபார்த்து அது உண்மையானது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பணிக்கு அமர்த்தப்படும் நபர்களின் நிரந்தர மற்றும் தற்காலிக முகவரி தொடர்பாக அப் பகுதியின் பொலிஸ் நிலையத்திலிருந்து பொலிஸ் அறிக்கை பெறுவது மிக முக்கியமாகும்.

அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை முன்கூட்டியே பெற்றிருக்க வேண்டும்.

வீட்டில் உள்ள தங்க நகைகள், பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்திருத்தல் வேண்டும்.

இயன்றவரை வீட்டு பணியாட்களை வீட்டில் தனியாக விடாமல் இருக்க வேண்டும். அவ்வாறு விட வேண்டிய நிலை ஏற்பட்டால் பெறுமதியான பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மேற்கண்ட ஆவணங்களின் பிரதிகளை வீட்டு உரிமையாளர் வசிக்கும் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியிடம் வழங்கி அது தொடர்பாக தகவல் அளிப்பதும் முக்கியமான கடமையாகும். அதேபோல் வீட்டு உரிமையாளர்கள் இவ் ஆவணங்களின் விவரங்களை தனியாக பதிவாக வைத்திருக்கவும் வேண்டும்.

இவ்விடயம் தொடர்பாக பொதுமக்கள் அவதானத்துடன் செயல்பட்டால் இத்தகைய மோசடி மற்றும் திருட்டுச் சம்பவங்களை குறைக்க முடியும் என இலங்கை பொலிஸார் மேலும் வலியுறுத்துகின்றனர்.

Post a Comment

0 Comments