Trending

6/recent/ticker-posts

Live Radio

அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி!


ஈரான் மீதான போரின் தாக்கத்தால் உலகளாவிய சந்தைகளுடன் இணைந்து அமெரிக்கப் பொருளாதாரமும் பெரும் சரிவைச் சந்தித்து வருவதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


அமெரிக்கப் பொருளாதாரம் ஒரு 'ரோலர்-கோஸ்டர்' பயணத்தை எதிர்கொள்வதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


வெள்ளிக்கிழமை அன்று S&P 500 பங்குச் சந்தை குறியீடு 1.3 வீதம் சரிவைச் சந்தித்தது. இது, 2026 ஆம் ஆண்டின் மிக மோசமான வாராந்திரச் சரிவாக (வாராந்திர இழப்பு 2 வீதம்) பதிவாகியுள்ளது.


சர்வதேச மசகு எண்ணெய் தரநிலையான 'பிரெண்ட் குரூட்' விலை ஒரு பீப்பாய்க்கு 92 டொலராக உயர்ந்துள்ளது. இது கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து சுமார் 30 வீத உயர்வைக் குறிக்கிறது.


ஏப்ரல் 2020 கொரோனா பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு, ஒரே வாரத்தில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வு இதுவாகும்.


அமெரிக்க தொழில் திணைக்களம் வெளியிட்ட தரவுகளின்படி, பெப்ரவரி மாதத்தில் மட்டும் அமெரிக்காவில் 90,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் எதிர்பாராத விதமாகக் குறைந்துள்ளன.

இது அமெரிக்க பெடரல் ரிசர்வ் அமைப்பைக் கடும் இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது.


எரிபொருள் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் ஒருபுறம் இருக்க, பொருளாதாரத்தை மீட்க வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டுமா அல்லது நிலையாக வைத்திருக்க வேண்டுமா என்ற இக்கட்டான நிலையை பெடரல் ரிசர்வ் எதிர்கொள்கிறது.


அமெரிக்காவின் வட்டி விகிதங்கள் தொடர்பாக பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவலையும், டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.

ஜனவரி மாதம் தனது விருப்பத்திற்குரிய ஒரு புதிய நபரை அவர் பரிந்துரை செய்ததும் குறிப்பிடத்தக்கது.


இந்த ஒட்டுமொத்த பொருளாதாரச் சூழல், ஈரான் மோதல் முடிவுக்கு வராவிட்டால் அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மையை மேலும் மோசமாக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அல்ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments