Trending

6/recent/ticker-posts

Live Radio

வரலாறு காணாத சரிவை சந்தித்த பாகிஸ்தான் பங்குச்சந்தை...!


மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றங்கள் காரணமாக, வாரத்தின் முதல் நாளான இன்று பாகிஸ்தான் பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்துள்ளது.


முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளைப் பாரிய அளவில் விற்பனை செய்ததினால், சந்தையின் முக்கிய குறியீடு ஆரம்ப வர்த்தகத்திலேயே 9,000 புள்ளிகளுக்கும் அதிகமாக வீழ்ந்தது.


பாகிஸ்தான் பங்குச்சந்தை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆரம்ப அமர்வில் பெஞ்ச்மார்க் குறியீடு 9,780 புள்ளிகளை இழந்து 147,715.95 புள்ளிகளாகக் குறைந்தது. இது முந்தைய நாளின் முடிவை விட 6.21 சதவீத சரிவாகும்.


குறியீடு 5 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, சந்தை விதிமுறைகளின்படி வர்த்தகம் 45 நிமிடங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக அல் ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது

Post a Comment

0 Comments