Trending

6/recent/ticker-posts

Live Radio

இன்று சர்வதேச மகளிர் தினம்...!



இன்று சர்வதேச மகளிர் தினமாகும். 1977 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை மார்ச் 08 ஆம் திகதியை சர்வதேச மகளிர் தினமாக அறிவித்தது.

அன்று முதல் இன்று வரை ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பு நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் திகதியை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடி வருகின்றமை ஒரு சிறப்பம்சமாகும்.

“வளமான நாட்டின் பெருமை அவள் – தேசத்தின் வழிகாட்டி” எனும் தொனிப்பொருளில் இம்முறை எமது நாடும் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுகின்றது.

இன்றைய தினத்தில் (8) தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பல நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நன்நாளில் ஸ்டார் வானொலியின் நேயர்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

Post a Comment

0 Comments