Trending

6/recent/ticker-posts

Live Radio

ஈரானின் பிடிக்குள் உலக எரிசக்தி சந்தை?



ஹோர்முஸ் நீரிணை ஊடாகச் செல்லும் கப்பல்களுக்கு போக்குவரத்து கட்டணத்தை அறவிடுவதற்கு ஈரான் எடுத்துள்ள தீர்மானம், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஈரானின் இந்தத் தீர்மானம் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் ஈரானின் தலையீடு மற்றும் பாதுகாப்பு கவலைகள் சர்வதேச ரீதியில் உற்றுநோக்குவதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

எரிசக்தி சந்தையில் ஈரான் தனது செல்வாக்கை அதிகரிப்பதையும், ஹோர்முஸ் நீரிணையை ஒரு அழுத்தக் கருவியாகப் பயன்படுத்துவதையும் வொஷிங்டன் விரும்பவில்லை. எரிசக்தி விநியோகத்தின் மீதான ஈரானின் இந்த ஆதிக்கம், சர்வதேச ரீதியில் ஈரானுக்கு அதிக பலத்தைச் சேர்க்கும் என அமெரிக்கா கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் ஹோர்முஸ் நீரிணை விவகாரம் மாத்திரமன்றி, லெபனான் விவகாரமும் ஒரு முக்கிய முட்டுக்கட்டையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஈரான் அதிகாரிகளின் கருத்துப்படி, லெபனானில் அமுல்படுத்தப்பட வேண்டிய போர் நிறுத்தமானது ஒரு விரிவான மற்றும் முழுமையான ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.

இருப்பினும், லெபனானின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த முரண்பாடான சூழ்நிலைகளுக்கு மத்தியில், எதிர்வரும் பேச்சுவார்த்தைகள் எவ்வாறான முடிவுகளைத் தரும் என்பதில் சர்வதேச நாடுகள் மிகுந்த அவதானம் செலுத்தி வருகின்றன.

Post a Comment

0 Comments