
ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் வெளியேறவேண்டும். இந்தியாவிலிருந்து யாரும் ஈரானுக்கு வரவேண்டாம் என்றும் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
ஈரான் அமெரிக்கா இடையிலான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், இரு நாடுகளும் எப்போதும் வேண்டுமானாலும் மோதிக்கொள்ள வாய்ப்புள்ளது என்பதால் மீண்டும் போர்ச்சூழல் அச்சுறுத்தலிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் நோக்கில் தூதரகம் நேற்று (23) இவ்வாறு அறிவிப்பு விடுத்துள்ளது.
“இந்தியா - ஈரான் இடையே சில விமானங்கள் இயக்கப்படுவது குறித்து தகவல் கிடைத்துள்ளது. வான்வழிச் சேவைக்கான கட்டுப்பாடுகள் மற்றும் சீரான விமான சேவைக்கான நிச்சயமற்ற சூழல், ஈரானுக்கு செல்லும் சர்வதேச விமான சேவையை தொடர்ந்து பாதித்து வருகிறது.
மேற்காசிய பகுதியில் பதற்றமான சூழல் தொடரும் நிலையில், இந்தியர்கள் ஈரானுக்கு பயணிப்பதை தவிர்க்கவேண்டும். ஈரானில் உள்ள இந்தியர்களும் விரைவில் அந்நாட்டை விட்டு வெளியேறவேண்டும்” என்று ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இந்தியர்கள் தூதரகத்தை தொடர்புகொள்வதற்கு +989128109115 +989128109109 +989128109102 +989932179359 ஆகிய தொடர்பிலக்கங்களையும் cons.tehran@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.



0 Comments