
மின்சார கட்டணத் திருத்தங்களின் போது, இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் தரம் காரணமாக ஏற்படும் நஷ்டம் மற்றும் மேலதிக செலவுகளை நுகர்வோரிடமிருந்து அறவிடாதிருக்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.
மின்சார உற்பத்தி, மின்சார பரிமாற்றம் மற்றும் விநியோகத்திற்காக ஏற்படும் நியாயமான செலவுகள் மட்டுமே மின்சார கட்டணத் திருத்த முன்மொழிவுகளில் கருத்தில் கொள்ளப்படுகின்றன என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த மின்சாரக் கட்டணத் திருத்தத் தீர்மானத்தில், நிலக்கரி காரணமாக ஏற்படும் மேலதிக செலவுகள் அல்லது ஏனைய நியாயமற்ற செலவுகள் அங்கீகரிக்கப்படவில்லை. எதிர்கால மின்சார கட்டணத் திருத்த முன்மொழிவுகளில், நிலக்கரி காரணமாக எழக்கூடிய மேலதிக செலவுகள் அல்லது எந்தவொரு நியாயமற்ற செலவுகளையும் மின்சாரக் கட்டணங்களில் சேர்க்காதிருக்க ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.



0 Comments