
வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிப்பவர்களுக்கு வெப்பம் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை (25) மதியம் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மனித உடல் உணரும் வெப்பக் குறியீடு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதும் வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும் முடிந்தவரை வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Comments