
மீன்பிடி படகுகளுக்கென எரிபொருள் மானியம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சிறிய படகுகளுக்கென ஒரு லீற்றருக்கு 50 ரூபாவும் பலநாள் மீன்பிடி படகுகளுக்கென ஒரு பயணத்திற்கு 150,000 ரூபா மானியம் வழங்கப்படும்.
ஏப்ரல் 20ம் திகதி முதல் இந்த மானிய திட்டம் நடைமுறைக்கு வருமென கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக மீனவர்கள் தமது தொழிலை முன்னெடுப்பதில் முகம்கொடுக்கும் சிரமங்கள் குறித்து கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளார்.
இதனால் மீனவர்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை குறைக்கும் வகையில் அவர்களுக்கு விசேட கொடுப்பனவை வழங்க இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.



0 Comments