
அண்மையில் புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று (12) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மத்திய பேருந்து நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் கூறப்படும் 33 வயதுடைய சந்தேகநபர், நேற்றைய தினம் (11) களனி பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேகநபரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். இதன்போது வழக்கை பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



0 Comments