
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில், இலங்கை ரயில்வே திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் நவீனமயமாக்கல் பணிகள் நாளை (09) முற்பகல் 9:00 மணிக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
இந்த நவீனமயமாக்கல் பணிகள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன்கீழ், கோட்டை ரயில் நிலையத்தை நவீன வசதிகளுடன் கூடிய ஒரு ரயில் நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



0 Comments