
பண்டிகைக் காலத்தில் நடத்தப்படும் சிறப்பு சோதனை மற்றும் விசாரணைகள் ஏப்ரல் 30ஆம் திகதி வரை தொடரும் என நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அறிவித்துள்ளது.
நுகர்வோருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் சம்பவங்களைக் குறைப்பதற்கு மார்ச் 20 முதல் இன்று வரை சுமார் 2000 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என சபை தெரிவித்துள்ளது.
சந்தையில் பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தாமை, பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல், நுகர்வோரை நியாயமற்ற முறையில் நடத்துதல் போன்ற பிரச்சினைகளை இத் திட்டம் இலக்கு வைக்கிறது என சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் சுரண்டலைத் தடுக்கவும், நியாயமான வர்த்தக நடைமுறைகளை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சந்தைகளில் நியாயமற்ற முறையில் நடத்தப்படுதல் அல்லது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அலுவலக நேரங்களில் உதவி எண் 1977ஐத் தொடர்புகொள்வதன் மூலம் முறைப்பாடுகளைப் பதிவு செய்யலாம். இது தொடர்பில் அதிகாரிகளால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Comments