
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்றும், ஜூன் முதல் வாரம் வரை எரிபொருள் கையிருப்பு இருக்கும் என்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மேலும் எரிபொருள் ஏற்றிய கப்பல்களைக் கொண்டுவருவதற்காக பல வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்று (08), டீசல் ஏற்றிய மூன்றாவது கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.



0 Comments