Trending

6/recent/ticker-posts

Live Radio

மின்சார வாரிய மறுசீரமைப்பு – விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு இன்று முதல் இழப்பீடு...!



மின்சார வாரியத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தன்னார்வமாக ராஜினாமா செய்த ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணி இன்று (15) தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இழப்பீடு வழங்கும் நிகழ்வு, எரிசக்தி மற்றும் மின்சார அமைச்சர் அநுர கருணாதிலக தலைமையில் பெருமைமிகு சேவையின் பாதுகாப்பான முடிவு என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

எரிசக்தி அமைச்சு தெரிவித்ததின் படி, இந்த இழப்பீடு திட்டத்திற்காக ரூ. 8.5 பில்லியன் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மொத்தம் 1,898 ஊழியர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின்சார துறையின் மறுசீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments