தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு இன்று (15) திங்கட்கிழமை கிண்ணியா நகர சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், கிண்ணியா பிரதேச செயலகம், கிண்ணியா தளவைத்தியசாலை மற்றும் பொலிஸ் திணைக்களம், நகர சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் சகிதம் கிண்ணியா பஸ் தரிப்பிடத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அச்சுற்று வட்டாரத்தில் உள்ள வைத்திய சாலை தங்குமிடம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக தங்குமிடம், ஏவுயு, சந்தை,, வெற்றுக் காணிகள், கடைகள், எரிபொருள் நிலையங்கள் பரிசோதிகப்பட்டன.
அத்துடன் டெங்கு பெருகக் கூடிய இடங்களை இனங்கண்டு துப்பரவுப் பணிகளையும் செய்தனர். டெங்கு பரவக்கூடிய இடங்களை வைத்திருந்த ஒருசில நிறுவனங்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் அவர்களுக்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.

இதில் கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.மஹ்தி, கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.ஹனி, கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.அஜீத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

0 Comments