Trending

6/recent/ticker-posts

Live Radio

ஹொட்ரிக் கோலுடன் குளோஸ் சாதனையை சமன் செய்தார் மெஸ்சி...!!



அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் ஹொட்ரிக் கோல் அடித்த அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி, தனது உலகக் கோப்பை கோல் எண்ணிக்கையை 16 ஆக உயர்த்தியுள்ளார்.

இதன் மூலம் அவர் ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோஸின் உலகக் கோப்பை அதிக கோல்கள் சாதனையை சமன் செய்துள்ளார். மெஸ்சி இந்த சாதனையை 27 போட்டிகளில் எட்டியுள்ளார்.

இதற்கு முன்பு உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோஸ் பெற்றுள்ளார்.

ஜெர்மனி அணிக்காக விளையாடிய அவர், 24 உலகக் கோப்பை போட்டிகளில் 16 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இவரின் சாதனையை தற்போது மெஸ்சி சமன் செய்துள்ளார்.

உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பிரேசிலின் முன்னாள் ஜாம்பவான் ரொனால்டோ நசாரியோ 15 கோல்களுடன் மூன்றாவது இடத்திலுள்ளார். அவரைத் தொடர்ந்து பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே, வெறும் 15 உலகக் கோப்பை போட்டிகளில் 14 கோல்கள் அடித்து நான்காவது இடத்திலுள்ளார்.

38 வயதிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் லியோனல் மெஸ்சி, தற்போது குளோஸின் சாதனையை சமன் செய்துள்ள நிலையில், இந்த உலகக் கோப்பை தொடரிலேயே 17ஆவது கோலை பதிவு செய்து புதிய உலக சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments