Trending

6/recent/ticker-posts

Live Radio

பிடியாணையை மீளப்பெறக் கோரும் பெசிலின் கோரிக்கை நிராகரிப்பு...!



முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப் பெறுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை மாத்தறை பிரதம நீதவான் நிராகரித்துள்ளார்.

மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த மே 22ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதையடுத்து பெசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

உடல்நலக் குறைவு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து, அவரது சட்டத்தரணிகள் வைத்திய அறிக்கைகளுடன் பிடியாணையை மீளப் பெறுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், சந்தேகநபர் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருப்பதாகக் குறிப்பிடப்பட்ட நிலையில், அவர் நேரில் முன்னிலையாகாமல் பிடியாணையை மீளப் பெற முடியாது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments