Trending

6/recent/ticker-posts

Live Radio

தமிழக அரசியலில் பரபரப்பு..! தனியார் பள்ளிகள் விவகாரத்தில் சிக்கும் அன்பில் மகேஷ்..?



தனியார் பள்ளிகளுக்கான என்ஓசி உள்ளிட்ட அனுமதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

அந்த விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தனியார் பள்ளிகள் கல்வியை வியாபாரம் செய்துக் கொண்டிருக்கின்றனர் என்ற கருத்து இருக்கின்றது. இருந்தாலும், குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் எட்டாக்கனியா இருப்பவருக்கும் கல்வியைக் கொடுக்கிறீர்கள். நீங்கள் கடந்து வந்த பாதை கரடுமுரடாக இருந்திருக்கலாம். நகைகளை அடமானம் வைத்தும், மிகுந்த சிரமங்களுக்கு இடையேயும் தனியார் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். பள்ளிகளை நடத்துவது லாப கணக்கு அல்ல; புண்ணிய கணக்கு.எத்தனையோ தனியார் பள்ளி நிர்வாகிகள் என்னிடம் புலம்பி இருக்கிறார்கள். காசு கேட்டார்கள் என்று சொன்னார்கள். அதனை நாம் மாற்றுவோம் எனக் கூறினேன்.

இனிமேல் ஒரு பைசா கூட கொடுக்க வேண்டாம். எந்த கட்சி கேட்டாலும் தராதீர்கள். பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை தெரியும் என்று கூறிக் கொண்டு யார் வந்தாலும்கூட அவரை அருகிலே அனுமதிக்காதீர்கள்; வெளியே செல்லுங்கள் என கூறுங்கள். ஜூலை 1- ஆம் தேதி முதல் இணைய வழியாக மட்டுமே தனியார் பள்ளிகள் அனுமதிகள் பெற வழிவகை செய்யப்படும்.ஒரு சகோதரனாகக் கேட்கிறேன், தனியார் பள்ளிகள் முடிந்த வரை தங்களுடைய கட்டணத்தைக் குறையுங்கள் என்று பேசினார்

இந்த விழா முடிந்த பிறகு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு நிர்வாகி DNC இளங்கோ பேசும்போது, ‘தனியார் பள்ளிகளுக்கான தொடர் அங்கீகாரம் கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக 2 ஆயிரம் பள்ளிகளுக்கு தேங்கிக் கிடந்தது. சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு என்.ஓ.சி. வாங்குவதற்கு 25 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்று ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் அமைச்சர் கொடுத்திருக்கிறார். இது கல்வித் துறையில் நடந்த புரட்சி. தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்துக்க் கொள்கிறோம்’ என்று பேட்டி கொடுத்தார்.

இது குறித்து, தனியார் பள்ளி கூட்டமைப்பினர் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, 'தமிழகத்தில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், தடையில்லா சான்றிதழ் வழங்க, முந்தைய ஆட்சியினருக்கு 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டி இருந்தது. 'ஆனால், த.வெ.க., ஆட்சியில் 1 ரூபாய் கூட செலவு இல்லாமல் அங்கீகாரம் பெற்றிருக்கிறோம்' என, அந்த கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறினர். இதன் வாயிலாக, கடந்த தி.மு.க., ஆட்சியில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் நடந்த முறைகேடுகள் அம்பலமாகி உள்ளன.

இந்த முறைகேட்டை தற்போதைய அரசு தோண்டி எடுத்துள்ளது. தனியார் பள்ளிகள் சார்பாக அளிக்கப்படும் புகார் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது எனலாம்.

Post a Comment

0 Comments