
ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அரபு நாடுகளில் இத்தகைய சட்டத்தைக் கொண்டு வரும் முதல் நாடு இதுவாகும்.
இதில் குறைந்தபட்ச வயது 15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தின்படி, 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் புதிய சமூக வலைத்தளக் கணக்குகளைத் தொடங்கவோ அல்லது ஏற்கனவே உள்ள கணக்குகளைப் பயன்படுத்தவோ முடியாது.அத்துடன்,வயது அடிப்படையில் மட்டுமே தகவல்கள் காட்டப்பட வேண்டும்.
அத்துடன்,அடையாளம் தெரியாத நபர்களுடன் தொடர்பு கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மொபைல் திரை நேரம் மற்றும் இனைய வழி பாதுகாப்பை உறுதி செய்ய பெற்றோர் கண்காணிப்பு வசதிகள் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
2024-ல் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில், குழந்தைகள் தினமும் சராசரியாக 3 மணி நேரம் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தெரியவந்தது. இதன் விளைவாக ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு ஓராண்டு காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன்,அவுஸ்திரேலியா, மலேசியா, பிரிட்டன் போன்ற நாடுகளும் ஏற்கனவே இது போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 Comments