Trending

6/recent/ticker-posts

Live Radio

வீரவில பகுதியில் தனியார் பஸ் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : 19 பேர் காயம்...!


மாத்தறை - திஸ்ஸமஹாராம பிரதான வீதியின் வீரவில பகுதியில் தனியார் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வீரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவதாகக் வீரவில பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

திஸ்ஸமஹாராமவிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று, வீரவில பிரதேச செயலகத்திற்கு அருகில் வைத்து மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

இதன்போது வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த பஸ், வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தின் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்த 19 பேரும் உடனடியாக தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வீரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments