Trending

6/recent/ticker-posts

Live Radio

இலங்கை ஏ - இந்தியா ஏ 2ஆவது 4 நாள் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடையும் சாத்தியம்...!



இலங்கை ஏ அணிக்கும் இந்திய ஏ அணிக்கும் இடையில் காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது நான்கு நாள் உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடையும் சாத்தியம் காணப்படுகிறது.

இந்தப் போட்டியில் இலங்கை ஏ அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 366 ஓட்டங்களைக் குவித்தது.

இதில் சஹான் ஆராச்சிகே 127 ஓட்டங்களையும் நுவனிது பெர்னாண்டோ 44 ஓட்டங்களையும் அஞ்சல பண்டார 42 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் குர்நூர ப்ரார் 77 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் சரண்ஷ் ஜெய்ன் 92 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இந்தியா ஏ அணி நேற்று 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்களை இழந்து 541 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

இதில் சாய் சுதர்சன் 168 ஓட்டங்களையும் தெவ்டத் படிக்கல் 94 ஓட்டங்களையும் சரண்ஷ் ஜெய்ன் ஆட்டம் இழக்காமல் 68 ஓட்டங்களையும் த்ருவ் ஜுரெல் 53 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கேஷர நுவன்த 158 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் டிலும் சுதீர 101 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Post a Comment

0 Comments